549. டகிள்பாட்சா "பழம்பெரும்" கவிதைகள் - விருந்தினர் இடுகை
டகிள் பாட்சாவின் அறிமுகம் சமீபத்தில் டிவிட்டர் மூலம் கிட்டியது. சுவாரசியமான மனிதர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். அந்தக்காலத்து பத்திரிகையாளர். இப்போது கணினித் துறையில் பணி புரிகிறார். சரளமான தமிழ். தமிழ் வலைப்பதிவுலகில் டோண்டு ராகவன் போல ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். பதிவெழுத நேரம் கண்டுபிடிப்பது அவர் சாமர்த்தியம் :)
அவர் 80களில் எழுதிய 4 (பழைய வாசனை அடிக்கும்!) கவிதைகளை தன் ஞாபகத்திலிருந்தே எழுதி எனக்கு அனுப்பினார். வாசிக்கையில், இக்காலச் சூழலில் அக்கவிதைகள் "வித்தியாசமாக"த் தோன்றின! வாசிக்கும் இளைஞர்களுக்கு, இவை சிரிப்பை வரவழைக்கலாம்! ஆனால், 25 வருடங்கள் முன்பு வந்த ஆ.விகடனையும், குமுதத்தையும், சாவியையும், இதயம் பேசுகிறதையும் ஞாபகப்படுத்தி, எனக்கு நாஸ்டால்ஜியாவை வரவழைத்த கவிதைகள் இவை :)
டகிள் GCTயில் Engineering படித்துக்கொண்டிருந்த போது (நான் படித்துக் கொண்டிருந்தபோது தான், டகிள் எனக்கு ஒரு வருடம் ஜூனியர், காலேஜில் மட்டும்!) ஒரு மாணவி ஏகப்பட்ட புலம்பலாய் ஆண் வர்க்கத்தையே தாக்கி காலேஜ் தமிழ் மன்ற notice board-ல் 'இதய சோகம்' என்று ஒரு கவிதை எழுதியிருந்தாள். 'ஆண்கள் மோசக்காரர்கள், கயவர்கள், காதலித்து ஏமாற்றி நெஞ்சில் மிதித்துவிட்டு செல்பவர்கள்' என்கிற ரீதியில் போனது கவிதை. பெண்களிடம் பெரிய வரவேற்பு. நம்ம டகிள் ஒரு பதில் கவிதை எழுதி தமிழ் மன்றத் தலைவரிடம் கொடுத்தார். அந்த professorம் அதை படித்து ரசித்து Notice Boardல் அதை publish செய்தார். அந்தக் காலத்தில் மாணவர்களும் மற்ற professorகளும் மிகக் கொண்டாடிய அந்த கவிதை கீழே:
அந்த "இதய சோகம்" எழுதிய பெண் கவிஞர், இப்போது பெரிய லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறார், அவர் யார் என்பது இடுகையின் முடிவில் !!
டகிள் கவிதை 1 - இதய சோகத்திற்கு ஆறுதல்
டகிள் கவிதை 2 - அறிவுச்சரிவு
டகிள் கவிதை 3 - பார்ட் டைம் B.E
டகிள் கவிதை 4 - கனவு ஜீவிதம்
டகிள் எழுதிய (இடுகையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட) "இதய சோகத்திற்கு ஆறுதல்" கவிதைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த அந்த பெண் கவியின் பெயர் டகிளுக்கு ஞாபகமில்லை!
சமீபத்தில் டகிளிடம் நான் தொலைபேசிக் கொண்டிருந்தபோது, "அந்த பெண் கவி யார் தெரியுமா? திரைத்துறையில் பிரகாசிக்கும் நம்ம கவிஞர் தாமரை தான். அவர் என்னுடைய பேட்ச் தான், GCTயில்"". என்றேன். "டகிளுக்கே டகிளா?" என்றார் :) "இல்லை, அது தாமரை தான். அப்போதே நிறைய கவிதைகள்/கட்டுரைகள் எழுதுவார்" என்றேன்.
தாமரை அப்போதே பெண்ணியவாதக் கருத்துகளை தைரியமாகப் பேசுவார். மெக்கானிகல் Engg. வகுப்பில் அவர் ஒருவர் தான் பெண்!
புதிதாக தமிழில் வலை பதிய வந்துள்ள டகிள்பாட்சாவை வாசகர்/நண்பர் சார்பில் வரவேற்கிறேன். அவர் நிறைய எழுத வாழ்த்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்!
எ.அ.பாலா
11 மறுமொழிகள்:
Test !
ஆஹா இம்புட்டு விசயமிருக்கா அப்ப டகிள் பாட்சா பிகில் அடிக்கிற அளவுக்கு,கதை கவிதை & பேட்டிகள்ன்னு பட்டைய கிளப்பப்போறாங்களா? ரைட்டு :)))
அவர் எழுதிய டகிள் பேட்டியை நீங்கள் வெளியிடமாட்டீர்களா :) :)
//நெஞ்சிலே துணிவிருந்தால்
Part Time B.E. படிக்கப் போ!//
டிப்ளமோ முடித்துவிட்டு அரசு பொறியியல் துறையில் பணியாற்றிக்கொண்டே படித்துநொந்துபோன அலுவலரின் குரலை போன்றே ஒலிக்கிறது :(
550 போஸ்ட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :))
பழம் பெரும் பாடல்கள் புனைய இவர் என்ன கேபிசுந்தராம்பாளா? எகொஇட?
80s பேக் டிராப் கவிதைகள்! புதையல்கள் மேலும் வெளிவரட்டும்.
////நெஞ்சிலே துணிவிருந்தால்
Part Time B.E. படிக்கப் போ!//
டிப்ளமோ முடித்துவிட்டு அரசு பொறியியல் துறையில் பணியாற்றிக்கொண்டே படித்துநொந்துபோன அலுவலரின் குரலை போன்றே ஒலிக்கிறது :(
//
:-)) அதான் நான் அரசு வேலையை உதறி விட்டு பார்ட் டைம் படிக்கப் போனேன்.
Lovely post! Dropping by...
p/s: We would like to invite all of you to join our blogging community which helps you to get more visitors to your blogs. It's totally free and you get the chance to meet other celebrity bloggers. Visit us at Blog Traffic
vanakkam, naan thamarai.. nanri, bala... ( ennudan padithadhaai solgireergal, enakku ninaivillai ).
Naan endha ' aann edhirupu kavithaiyaiyum ezudhi , thamil manrathil vaasithadhillai..." .
Adharkku edhir kavithai enru neengal koduthulladhaiyum ketta nyabagam illai..
Ungal nanbarin ninaive sariyaana ninaivu..andha penkavi naanillai enru therindirukkiradhu..
தாமரை,
//Ungal nanbarin ninaive sariyaana ninaivu..andha penkavi naanillai enru therindirukkiradhu..//
வாங்க, தவறாக சொல்லிவிட்டேன் போலுள்ளது. மன்னிக்கவும்.
உங்களுக்கு TS நாராயணனை (GCT 82-86, ECE Branch) ஞாபகம் இருக்கிறதா ? எனக்கு இன்னும் தொடர்பு இருக்கிறது.
தங்கள் மெயில் ஐடி தரவும்.
balaji_ammu@yahoo.com
கலக்கல் பாட்சாவாக இருக்கிறாரே. பட்டைய கிளப்புகிறார்...
நான் ஜட்டியில்லாமல் திரிந்த காலத்தில் , அதாவது எனக்கு ஒரு வயசு, அவர் பி.இ ? யம்மாடியோவ்.
அறிமுகத்துக்கு நன்றி...அப்படியே திரட்டிகளிலும் இணைச்சுருங்க.
Post a Comment